1. மேகலாயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.27)இல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி சனிக்கிழமை (மார்ச்.3) நடைபெற்றது.

2. இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, என்.பி.பி, யூடிபி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. பிரச்சாரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டார். அதனால் ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

3. பாரதிய ஜனதா கட்சி இரண்டு இடங்களிலும்; காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும்; தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஹெச்.எஸ்.பி.டி.பி (Hill State People’s Democratic Party) இரண்டு இடங்களிலும்; என்.பி.பி (National People’s Party) 19 இடங்களிலும்; யூடிபி (United Democratic Party) ஆறு இடன்ம்க்களிலும் வெற்றிபெற்றுள்ளன. அதேபோன்று சுயேட்சைகள் மூன்று இடங்களிலும்; பிடிஎஃப் (People’s Democratic Front) நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

4. கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும்; என்.பி.பி. இரண்டு இடங்களிலும், மட்டுமே வெற்றிபெற்றிருந்தன. அனால் இம்முறை காங்கிரஸ் கட்சி ஏழு தொகுதிகளை இழந்துள்ளது. அதேபோன்று என்.பி.பி கட்சி கூடுதலாக 17 இடங்களைப் பெற்றுள்ளது.

5. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பதால் தற்போதைய சூழலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.

megalaya

Source : eci.nic.in

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here