கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள  அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியிருந்தது.

இதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள சாத்தியக்கூறு அறிக்கை குறித்து பல்வேறு துறைகளிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டிருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும், அப்போது மேகதாது அணை சிக்கல் குறித்து  தமிழக – கர்நாடக முதல்வர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக நிதின்கட்கரி வாக்குறுதி அளித்ததாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மத்திய நீர்வளத்துறைக்கு, தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையையும் கர்நாடக அரசு தன்னிச்சையாகவே அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பரிசீலிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  
இது தொடர்பாக அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகளை தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்