அடுத்து விஜய்சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மராத்தியில் இதற்கு முன் ‘சா சசுச்சா, யெதா’ ஆகிய படங்களை இயக்கிய கிஷோர் பாண்டுரங் பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தில் நடிக்கவுள்ளதாக விஜய் சேதுபதி இன்று அறிவித்துள்ளார்.
சில நேரங்களில் மெளனம் மிகவும் சத்தமாக இருக்கும். என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய புதிய படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தினால் புதிய சவாலுக்கும் புதிய தொடக்கத்துக்கும் தயாராகியுள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்குத் தேவை என்று கூறியுள்ளார்.
ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.