2018-Mercedes-Benz-C-Class

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது C – கிளாஸ் வகை C200 காரை புதிய மாற்றங்களோடு இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய பம்பர், புதிய எல்.இ.டி ஹெட்லைட் மற்றும் புதிய சக்கரங்கரங்களும் வடிவமைப்பில் மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் பெரும் அளவிலான மாற்றங்கள் இன்டீரியரில் தான் செய்யப்பட்டுள்ளது.

18C0130_02

தற்போது சந்தையில் உள்ள C-கிளாஸ் காரில் 2 லிட்டர் 181 ஹார்ஸ் பவர் கொண்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கிறது. அடுத்து வர உள்ள C-கிளாஸில் இந்தத என்ஜினில் மாற்றம் செய்யப்பட்டு 2 லிட்டருக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 4 சிலிண்டர் கொண்ட இந்த என்ஜின் 184 ஹார்ஸ் பவரும், 280 என்.எம் டார்க்கும் கொடுக்கு திறன் கொண்டதாக இருக்கும். இது 2 லிட்டர் என்ஜினின் 300 என்.எம் டார்க்கை காட்டிலும் குறைவே.

merc_c-class_2018_54

C200 காரில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான விஷயம் இ.கியூ பூஸ்ட். இந்த பூஸ்ட், குறைந்த ரெவ் (என்ஜின் ஆக்சலரேஷன்) இருக்கும் போது மட்டுமே உபயோகத்தில் இருக்கும். இந்த காரில் இடம் பெற்றுள்ள பேட்டரி 48 வோல்ட் மின்சாரம் சக்தியை தருவதுடன், அந்த காருக்கு கூடுதலாக 13 பி.எச்.பி ஹார்ஸ் பவர் கொடுத்து, என்ஜினின் திறனை பூஸ்ட் செய்கிறது. கார் ஓடத் தொடங்கி சில விநாடிகள் இந்த பூஸ்ட் பயன்பாட்டில் இருக்கும். வேகம் பிடித்து, டர்போ பயன்பாட்டுக்கு வந்தவுடன், என்ஜின் தன் கையில் இயக்கத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும்.

merc_c-class_2018_52

சி-கிளாஸ் போன்ற ஹை எண்ட் கார்களுக்கு 1.5 லிட்டர் குறைந்த பவர் கொண்ட என்ஜின் பொருத்தமானது அல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனல், ஆடி ஏ4 1.4 லிட்டர் என்ஜின் காருடன் ஒப்பிடுங்கள். ஏ4 141 ஹார்ஸ் பவரும், 250 என்.எம் டார்க் மட்டுமே தருகின்றது. ஏ4 உடன் ஒப்பிடும் போது, என்ஜின் வகையில் சி200 சிறப்பான திறன் கொண்டதாகவே உள்ளது.

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் C200 காரின் விலை:
₹ 38.55 Lakhs – ₹ 63.88 Lakhs (Ex-Showroom)
₹ 47.92 Lakhs – ₹ 75.84 Lakhs (On Road)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here