மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் ரேஞ்ச் (C-Class Range ) புதிய மாடல் நைட்ஃபால் எடிஷன் (NightFall Edition) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் கூப், செடான் மற்றும் எஸ்டேட் வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
c-class_coupe_nightfall_edition_-_studio
புதிய நைட்ஃபால் எடிஷன் சி-கிளாஸ் மாடல்களை மேம்படுத்த வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது. புதிய எடிஷனில் பவுடர் கோட் செய்யப்பட்ட மேட் பிளாக் வீல்கள், கருப்பு நிற விங் விரர்கள், கிராஃபிக்ஸ் மற்றும் கார்பன் ரியர் ஸ்பாயிலர் பெற்றிருக்கிறது. மூன்று நிறங்களில்
மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன் இரிடியம் சில்வர், செலினெட் கிரே மற்ரும் ஆப்ஸ்டியன் பிளாக் என கிடைக்கிறது.
சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன்கள் AMG வரிசையில் கிடைக்கின்றன. இதில் பிளாக் ஆஷ் வுட் ட்ரிம், AMG ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், AMG பாடி ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் பெற்றிருக்கிறது.

நைட்ஃபால் எடிஷன் மாடலில் 18 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், பவுடர் கோட்டெட் மேட்-பிளாக் ஸ்கீம் மற்றும் டைமன்ட் கிரில் மற்றும் க்ரோம் பின்களை கொண்டுள்ளது.

உள்புறம் மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன் மாடலில் ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ்-கோ கம்ஃபர்ட் பேக்கேஜ், மெமரி பேக்கேஜ் மற்றும் பானரோமிக் கிளாஸ் சன்ரூஃப் மற்றும் பர்ம்ஸ்டெர் சரவுன்டு சிஸ்டம் மற்றும் கமான்ட் ஆன்லைன் உள்ளிட்டவை பெற்றிருக்கிறது.

புதிய எடிஷன் இரண்டு டீசல் இன்ஜின்கள் C 220d, C 250d மற்றும் C 200 பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

UK வில் மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷனின் விலை இந்திய மதிப்பில் ரூ29.82 லட்சம் . இந்தியாவில் நைட்ஃபால் எடிஷன் எப்போது கிடைக்கும் என்பது சற்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும்,

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here