AMG15174-hd

ஜெர்மனியின் சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் செடன் (Mercedes benz sedan) பிரிவில் முற்றிலும் புதிய ஏஎம்ஜி ஈ-63(AMG E63) என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 மாடல் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கூறியதாவது: உள்நாட்டு வாடிக்கையாளர்களிடையே ஏஎம்ஜி தொழில்நுட்ப ரக கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்தே, இப்புதிய ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். 4 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட இக்காரின் விலை ரூ.1.5 கோடியிலிருந்து தொடங்குகிறது. நடப்பு ஆண்டில் இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் பல புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதிவேக செயல்பாட்டைக் கொண்ட கார் பிரிவில் நாங்கள் ஏற்கெனவே 50 சதவீத பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளோம் என்று அவர்
கூறினார்.

பிஎம்டபிள்யூ எம்5 ( Bmw M5) , மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ் (Maserati-quattroporte-gts), போர்ஷே பனமெரா டர்போ மற்றும் ஆடி ஆர்எஸ்6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது புதிய ஏஎம்ஜி ஈ-63.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்