ஆடி ஏ7 மற்றும் பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் க்ரேன் கோப் ஆகிய கார்கள் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸின் சி.எல்.எஸ். கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லாப்பிங் ரூஃப்லைன் மற்றும் ஃபேரம்கள் இல்லாத கதவுகள் பென்ஸுக்கு அழகு சேர்க்கின்றன.

புதிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குள் சி.எல்.எஸ். காரின் அழகை மேலும் அதிகரிக்கிறது. 5 ஸ்போக்குகளை கொண்ட 18 இன்ச் அலாய் வீல்களுக்கு சில்வர் நிறம் பூசப்பட்டுள்ளது.

உள்புற வடிவமைப்பை பொறுத்தவரையில் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காரை வடிவமைத்திருக்கின்றனர். 4 செட் ஜெட் டர்பைன் ஏசி, உயர் தரமான மர வடிவமைப்புகள், இன்ஃபோடெய்ன்மெண்டுக்கான 2 பெரிய ஸ்க்ரீன்கள், வேகம், தூரம் உள்ளிட்டவற்றை காட்டும் டிஜிட்டல் டேஷ் போர்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சம் 242 பி.எச்.பி. திறனை அளிக்கிறது. டுயல் க்ளட்ச் மற்றும் 9 ஆட்டோமேட்டிக் கியர்கள் சி.எல்.எஸ்.-ன் வேகத்திற்கு உதவுகின்றன. 0-ல் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.2 வினாடிகளில் சி.எல்.எஸ். எட்டி விடுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டர் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். இந்தியாவில் ரூ. 84.7 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here