மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யத் தேவையில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தீபாவளியன்று நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். மேலும் அது தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படக் குழுவினருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் நடிகர் கமலஹாசன். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் திரைப்படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு விட்டது என்றும், மறு தணிக்கை செய்ய வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார். விமர்சனங்களை மவுனமாக்காதீர்கள் என்றும், விமர்சனங்களால்தான் இந்தியா ஒளிரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

kamal

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்