மெர்சல் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தீபாவளியன்று நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். அவரைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மெர்சல் படத்துக்கு பல்வேறு திரையுல பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது மெர்சல் திரைப்படம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”மிஸ்டர்.மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

rahu

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்