மெரினா புரட்சி – பாண்டிராஜ் தயாரிப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவு திரைப்படம்

0
252

சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினார்கள். இரவு பகலாக எந்த அசம்பாவிதமும் இன்றி நடந்த இந்தப் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் போராட்டம் பரவி, இறுதியில் மத்திய அரசு பணிந்தது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. கூடவே சந்தனத்தேவன் என்ற ஜல்லிக்கட்டு தொடர்பான படத்தை இயக்குனர் அமீர் அறிவித்தார். ஹிப் ஹாப் ஆதி ஜல்லிக்கட்டு தொடர்பான பாடலை வெளியிட்டார். பிஜி முத்தையா ஜல்லிக்கட்டை மையப்படுத்தி மதுரவீரன் என்ற படத்தை எடுத்துள்ளார். சமுத்திரகனி தொண்டன் படத்தில் சம்பந்தமே இல்லாமல் 100 மாடுகளின் பெயர்களை பேசி வீர உரையாற்றினார். இவை பிரபலமானவை. பிரபலமாகாத ஜல்லிக்கட்டு தொடர்பான சினிமா விஷயங்கள் இன்னும் உண்டு.

மெரினா புரட்சி என்ற பெயரில் பாண்டிராஜ் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இது திரைப்படமா இல்லை ஆவணப்படமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. விரைவில் ட்ரெய்லர் வெளியீடு என்று ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் எதற்கு பயன்பட்டதோ இல்லையோ சினிமாக்காரர்களுக்கு நிறையவே லாபம்.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்