மெரினாவில் போராட்டம் நடத்த தடை: போலீஸார் எச்சரிக்கை

0
336

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நினைவேந்தல் நிகழ்ச்சியை சில அமைப்புகள் பொதுமக்கள் கூடும் மெரினாவில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன. எனவே யாரும் போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்