[vc_facebook type=”standard”][vc_tweetmeme type=”horizontal”]

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் மக்களின் விரைவு பயணத்துக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை – விமான நிலையம் உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் – சென்ட்ரல், சைதாப்பேட்டை – டி.எம்.எஸ். சுரங்கப்பாதையிலும் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

இன்நிலையில் சென்ட்ரல் முதல் அண்ணா சாலையில் டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்தப்பட்டு பயணிகள் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைப் போல் வேகமாக அதிகரித்து தினமும் 45 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் கடந்த 2 வாரங்களாக சென்ட்ரல் – விமான நிலைய வழித்தட பாதையில் அதிக பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த மாதம் 28 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்தனர். தற்போது 17 ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் சராசரியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமங்கலம், முகப்பேர், மதுரவாயல், பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், வேலைக்கு செல்வோர் அதிகமாக மெட்ரோ ரெயிலை தினமும் பயன்படுத்தி வருவதால் ரெயில் நிலையத்துக்கு தினமும் அதிகமான பயணிகள் வருகிறார்கள்.

பொது மக்கள், பயணிகள் இடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

[vc_video title=”இதையும் பாருங்கள் ” link=”https://www.youtube.com/watch?v=fhhtXhMc5Vk”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here