மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (MUJ) பொதுச்செயலாளர் மோகன் மறைவு

MUJ General Secretary Mohan passes away

0
311
மோகன், பொதுச்செயலாளர், சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ)

1954ஆம் ஆண்டில் உருவான மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (MUJ) அமைப்பின் பொதுச்செயலாளரும் தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாளருமான மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்; 54 வயதான மோகன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். செய்தியாளர்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர். செய்தியாளர்களுக்கான அடிப்படை வசதிகளை அரசிடம் கோரிப் பெறுவதில் திறமையுள்ளவர். செய்தியாளர்களுக்கு எதிரான, ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அரச அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்தவர். கர்நாடகத்தில் செய்தியாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக கூட்டங்களை ஒருங்கிணைத்தவர்.

தொழிற்சங்கங்களை பெரும் ஊடக நிறுவனங்கள் பெரிதும் மதிக்காத காலச்சூழலிலும் பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் மூலமாக ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி பெற முடியும் என்று நம்பினார். சக பத்திரிகையாளர் அன்பழகன் வீரப்பன் குண்டர் சட்டத்தில் கைதானபோது அரசுக்கு ஆதரவான நிலை எடுத்தது இவரது தொழிற்சங்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. மறைந்த மோகனுக்காக இப்போதுவின் பிரார்த்தனைகள்.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்