மூழ்கும் கப்பலிலிருந்து புத்திசாலி தப்பித்துவிடுவான் – தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா குறித்து ராகுல் காந்தி கருத்து

0
360

”நான் பார்த்த மிகச்சிறந்த பணி இது தான், அவ்வப்போது சர்ச்சைகள் வராமலில்லை” என நான்கு ஆண்டுகள் கழித்து புதன்கிழமை தன் பணியிலிருந்து விலகிய அர்விந்த் சுப்பிரமணி தெரிவித்தார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் பதவி விலகியதைத் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளர் ராகுல் காந்தி.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை தாக்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , பேரறிஞர்கள் வெளியேறும் செய்தியை
நிதியமைச்சர் ஃபேஸ்புக்கில் தலைப்பு செய்தியாக வெளியிடுகிறார்.

தலைமை பொருளாதார ஆலோசகரின் ராஜினாமா குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

நிதியமைச்சர் (முன்னாள்?) பூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் தலைப்பு செய்திகளை வெளியிடுகிறார். இந்தியா பொருளாதாரத்தின் சாவி பாஜக பொருளாளரிடம் இருக்கிறது.

பாஜக அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து புத்திசாலி தப்பித்துவிடுவான். ஆர் எஸ் எஸ்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாஜக எனும் கப்பல், விரைவில் பாறைகளில் மோதி உடையப்போகிறது.

அதே நேரத்தில் கேப்டன் டிமோ (DeMO) (மோடி) நன்றாக தூங்குகிறார். இது பைத்திய காரதனமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

2019 மே மாதம் ஒப்பந்தம் நிறைவடைய இருந்த நிலையில் நான்கு ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்த அர்விந்த் சுப்பிரமணியம் தான் செய்ததில் இதுவே சிறந்த பணி என்றபோதிலும் அவ்வப்போது சர்ச்சைகளும் ஏற்பட்டதாகக் கூறினார். இந்த ராஜினாமா செய்தியை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்தார் .

“குடும்ப விசயங்களுக்காக அமெரிக்கா திரும்ப விரும்புகிறார்… இதற்கு ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியை எனக்கு அவர் சொல்லவில்லை” என அருண் ஜேட்லி பதிவிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் அருண் ஜேட்லி சில நாட்களுக்கு முன்பு அர்விந்த் சுப்பிரமணியனுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார். “அவர் தெரிவித்த காரணங்கள் தனிப்பட்ட ரீதியிலானது என்றாலும் அவருக்கு அது மிகவும் முக்கியமானது” என்றார்.

59 வயதாகும் அர்விந்த் சுப்பிரமணியன் பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிலையத்தின் மூத்த ஆய்வாளர் ஆவார். அக்டோபர் 16, 2014இல் தலைமை பொருளாதார ஆலோசகரானார். பிறகு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

அதற்கு முன் அப்பொறுப்பை வகித்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றதைத் தொடர்ந்து அர்விந்த் சுப்பிரமணியன் அப்பதவியை ஏற்றார்.

“மூன்றாண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இன்னும் சிறிது காலம் பணியைத் தொடருமாறு நான் அவரை கேட்டுக்கொண்டேன். அப்போதும் அவர் குடும்ப விவகாரங்களுக்கும் தமக்கு பிடித்தமான பணிக்கும் இடையே சிக்கித் தவிப்பதாக சொன்னார்” என தெரிவித்த அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பதிவில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அர்விந்த் சுப்பிரமணியன் வலுமையான குழுவை கட்டமைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். ’மினிஸ்டர்’ என்று அழைத்தபடி ஒரு நாளுக்கு பலமுறை செய்திகளை தெரிவிக்க என் அறைக்கு வருவார். அவர் விலகியது எனக்கு இழப்பு என்பதை சொல்லி தெரியப்படுத்தவேண்டியில்லை” என “நன்றி அர்விந்த்” என்ற தனது பதிவில் அவரை வாழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் பயின்ற இந்திய பொருளாதார நிபுணர் உயர்பதவியை விட்டு விலகுவது கடந்த மூன்று ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும். 2016இல் முதலாவதாக ரகுராம் ராஜன் சென்றார்; அவருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்ற ஆண்டு நிதி ஆயோக்கின் தலைமை பதவியிலிருந்து அர்விந்த் பனகாரியா விலகினார்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here