ஜியோமி நிறுவனம் தனது புதிய Mi 9 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்கிறது. ஜியோமி வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் புதிய பல அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவருகிறது.

ஜியோமி வெளியிட்ட தகவல்களில், புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், இதன் பின்புறம் கிரேடியண்ட் வடிவமைப்பு மற்றும் பின்புறம் கிளாசி பேக் மற்றும் கிளாஸ் பேனல் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதால், Mi 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது. இத்துடன் Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது.

ஜியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மூன்று பிரைமரி கேமரா இவற்றில் ஒன்று 48 எம்.பி.சென்சார், 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதுதவிர ஜியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் X24 எல்.டி.இ. மோடெம் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here