மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா  அணியின்   ரோகித் சர்மா 67 ரன்கள்(6 பவுண்டரி, 3 சிக்சர், 51 பந்துகள்) குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 2422 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 107 சிக்ஸ் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நான்கு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

டி20: அதிக சிக்ஸர்கள் 

107 – ரோஹித் சர்மா 
105  – கிறிஸ் கெயில் 
103  – மார்டின் கப்தில் 

டி20: அதிக ரன்கள்

2422 – ரோஹித் சர்மா
2310 – விராட் கோலி
2272 – மார்டின் கப்தில்

அதிக டி20 சதங்கள்

ரோஹித் சர்மா – 4
மேக்ஸ்வெல் – 3
மன்ரோ – 3

அதிக அரை சதங்கள்

விராட் கோலி – 20
ரோஹித் சர்மா – 17
மார்டின் கப்தில் – 14

அதிக பவுண்டரிகள்

விராட் கோலி – 225
தில்ஷன் – 223
முகமது ஷஷாத் – 218
ரோஹித் சர்மா – 215