ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் ஸ்கிரிப்டை மூன்று பேர் எழுதுகிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 இல் இந்தியன் வெளியானது. அதன் இரண்டாம் பாகத்தை கமலை வைத்து ஷங்கர் இயக்குகிறார், லைகா தயாரிப்பு. இந்தி நடிகர் அஜய் தேவ்கான், நயன்தாரா, மலையாள நடிகர் நெடுமுடிவேணு ஆகியோர் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. அனிருத் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு. சமீபத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதிகளில் ஹெலிகாப்டரில் பறந்து இந்தியன் 2 படத்துக்கான லொகேஷன்களை தேடினார் ஷங்கர். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படத்துக்கு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் அந்தப் பணிகளை கவனிக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் ஸ்கிரிப்டை மூன்று பேர் எழுதுகிறார்கள். ஒருவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ஷங்கரின் 2.0 படத்திலும் இவரது பங்ளிப்பு உள்ளது. இரண்டாவது எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். உப்பு நாய்கள், கானகன், நீலப்படம் போன்ற நாவல்களை எழுதியவர், வசந்தபாலனின் அசிஸ்டெண்ட். மூன்றாவது வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்கி. இந்த மூவரும்தான் இந்தியன் 2 படத்தின் ஸ்கிரிப்டை எழுதுகிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here