மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா

0
232

மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் (Atom) என்ற குவாட்ரிசைக்கிள் வாகனத்தை பார்வைக்கு வைத்திருந்தது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் இந்த நிதியாண்டு முடிவதற்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் எலெக்ட்ரிக் மற்றும் ட்ரியோ சோர் போன்ற வாகனங்களை வெளியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வர்த்தக வாகனங்கள் மட்டுமின்றி இகேயுவி100 மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது, இந்த மாடல் விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரியோ மாடலுக்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியதால், மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ சோர் மாடல் மீதும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

D8s47fh-W4-AAZ7e-W

கடந்த ஆண்டு மட்டும் மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார்14 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பெரும்பாலான மாடல்கள் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here