புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான 8 நபர்கள் கொண்ட குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு அமைத்தது. மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவுக்கு, மூன்றாவது முறையாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1986-ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.அதன் பின்னர் 1992-ஆம் ஆண்டில் அந்தக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில்,மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி,முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.அந்தக் குழு தமது கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை புதிய கல்விக் கொள்கைக்கான இறுதி வடிவமாக மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

மத்திய அரசின் அறிவுத்தலின் அடிப்படையில் சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை கல்விக் கொள்கைக்கான அடிப்படையாக கொள்ளப்பட்டு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு,புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வறிக்கையை அப்போது சமர்ப்பிக்காத நிலையில்,கடந்த மாதம் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த அவகாசமும் முடிவடைந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here