ரயிலில் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Ashwini Vaishnaw - Wikipedia

இதுதெடார்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
ரயிலில் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என்றும், ஹைப்பர் லூப் திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில் ரூ.8.5 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

தெற்கு ரயில்வேயில் அதிக யானைகள் விபத்துக்குள்ளாவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு ஏற்ப சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். 

தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்கள் முழுமையாக சீரமைப்பட்ட உள்ளதாகவும், இதற்காக ரூ.3861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

மேலும், பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் இருந்து வருவதாகவும், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. விரைவில் புறநகர் ரயில்களில் மெட்ரோ ரயில்கள் போன்று குளிர்சாதன வசதிகள் செய்யும் பணி தொடங்கப்படும். 

கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 

சில நாள்களுக்கு முன்பு மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதால் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here