உச்சநீதிமன்றம்  அளித்த தீர்ப்பால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடனில் சிக்கி மூடப்படும் தருவாயில் இருக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அந்நிறுவனம் அளித்த பல இலவச சலுகைகளால் அனைத்து பயனர்களும் அந்நிறுவனம் நோக்கி செல்லத் துவங்கினர். இதனால் பல சிறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. மிகப்பெரிய அளவில் இருந்து வந்த ஏர்செல், டொகோமோ நிறுவனங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மூடப்பட்டன.

வோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை கொடுத்து வந்தது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக விரைவில் வோடபோன் நிறுவனம் மூடப்படும் என்ற தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில் தற்போது இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனமும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு செலுத்த வேண்டும். அதாவது உரிமம் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என செலுத்த வேண்டும். செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும்.

மத்திய டெலிபோன் துறை செல்போன் நிறுவனங்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது. ஆனால் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு வந்த தகவல் தொடர்பு சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தது.

மத்திய அரசின் இந்த அதிரடி கட்டண நிர்ணயத்தை சமாளிக்க இயலால் சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் நிர்ணயித்த கட்டணத்தை கட்டாமல் சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தனர்.

மத்திய அரசு தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் பணத்தை விரைவில் கட்டக்கோரி நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு நோட்டீசையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வந்ததால் உச்சநீதிமன்றத்தில் கட்டணங்கள் கட்ட தவறிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தை மூன்று மாத காலத்திற்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here