முஸ்லிம்களுக்கு ஒன்னுன்னா வருவேன்னு சொன்னீங்களே… முதலிடத்தில் டிரெண்டாகும் #வீதிக்குவாங்கரஜினி

0
878

முஸ்லீம்களுக்கு ஒன்னுன்னா முதல் ஆளா குரல் கொடுப்பேன்னு சொன்னீங்களே.. இப்போ வீதிக்கு வாங்க ரஜினி” என்று சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் #வீதிக்குவாங்கரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது . 

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் போராடினார்கள் .  இதன்காரணமாக நேற்றிரவு முதலே தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.. கலவரம், தடியடி, தள்ளுமுள்ளு, கைது, விடுவிப்பு என செய்திகள் வருகின்றன. போலீசாரும் பெரிய அளவில் வன்முறை வெடித்துவிடாமல் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். எனினும் தலைவர்களின் கண்டனங்கள், பொதுமக்களின் கோபங்கள் குறையவில்லை.

இந்த சமயத்தில், குறிப்பாக இந்த விவகாரத்தில் ரஜினியை சிலர் கேள்வி கேட்டுள்ளனர்.. “குடியுரிமை சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததே இதற்கு காரணம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளார்கள் .  இந்த சமயத்தில் ரஜினி எங்கே போனார், எங்களுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னாரே, எங்கே? வீதிக்கு வாங்க ரஜினி என்று ஹேஷ்டேக் போட்டு அழைக்க தொடங்கி உள்ளனர்.

குரு மூர்த்தி எழுதி தரத மட்டும் தான் இந்த ரோபோ பேசும்..” என்றும்,”ஒரு பேச்சுக்கு, முஷ்லீம்களுக்கு முதல் ஆளா குரல் குடுப்பேன்னு சொன்னதுக்கா இந்த டேக் #வீதிக்குவாங்க_ரஜினி போடுறாங்க” என்றும், “உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா….உங்கள் உடல்பொருள்ஆவி தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா அதனால… வீதிக்கு வாங்க ரஜினி” என்று ட்விட்டர்வாசிகள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here