அராரியா மக்களவைத் தொகுதி பயங்கரவாத மையமாக மாறும் என சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தும், புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ்பிரசாத் மவுரியாவும் அம்மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. கடந்த 25 வருடமாக யோகி ஆதித்யநாத் வசமிருந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதியை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது.

மேலும், பீகார் மாநிலம் அராரியா மக்களவை உறுப்பினர் முகமது தஸ்லிமுதீன் மறைவுக்குப் பின் அத்தொகுதி காலியாக இருந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முகமது தஸ்லிமுதீன் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான சர்ப்ராஸ் ஆலம், 61,988 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான பிரதீப் குமார் சிங்கைத் தோற்கடித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “நாட்டின் எல்லையாக மட்டும் அராரியா தொகுதி அமைந்திருக்கவில்லை. நேபாளம் மற்றும் வங்கதேசத்தை இணைக்கும் பகுதியாக மட்டும் அராரியா இருக்கவில்லை. அராரியா தொகுதி பயங்கராவதத்தின் மையமாக மாறப்போகிறது. இது பீகாருக்கு மட்டுமல்ல நாட்டிற்கே ஆபத்து” எனப் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிராஜ் சிங், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல்முறையல்ல. சமீபத்தில், மோடி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும் என்றும் பேசியிருந்தார்.

Source: financial express

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here