அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம் பாடகி ஒருவருக்கு பொது நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு இஸ்லாமிய மத குருமார்கள் தடை விதித்துள்ளனர்

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி இசை ஷோவில் கலந்துக்கொண்டு இரண்டாவதாக பரிசு பெற்றவர் நகித் அப்ரின். இவர் தனது ரியாலிட்டி ஷோவில் கிடைத்த புகழினால் பாலிவுட் திரைப்படமான அகிரா திரைப்படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இது தவிர்த்து பல இசை நிகிழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடி வந்துள்ளார்.

இந்நிலையில், வரும் மார்ச் 25ஆம் தேதி அஸ்ஸாமில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாட திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள ஒரு மசூதி அருகே நடைபெறவிருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சியில் நகித் பாடக்கூடாது என முஸ்லிம் மத குருமார்கள் தடை விதித்துள்ளனர். 42 மத குருமார்கள் விதித்துள்ள இந்தத் தடையில், பொது நிகழ்ச்சியில் நகித் இனி பாடக் கூடாது என்றும், இது போன்று நிகழ்ச்சியில் பங்கேற்பதை அவர் நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தடை குறித்து பேசிய நகித், “இந்தத் தடை என்னை மனதளவில் அதிர்ச்சயடையச் செய்துள்ளது. இதனால் மனதளவில் உடைந்து போனாலும் இசை உலகை விட்டு வெளியேற மாட்டேன். எனக்கு பல முஸ்லிம் பாடகர்கள் இசை உலகை விட்டு வெளியேற கூடாது என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளனர். இசை எனக்குக் கடவுள் அளித்த பரிசு, நான் அதைச் சரியாக பயன்படுத்துவதாக நம்புகிறேன். கடவுளைப் புறக்கணித்து அதை நான் செய்யவில்லை” என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : முகமத்: த மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்துக்காக மஜீத் மஜிதி, ரஹ்மானுக்கு ஃபத்வா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்