முஸ்லிம் ஊழியர் வேண்டாமென்ற வாடிக்கையாளருக்கு இந்து ஊழியரைத் தந்த ஏர்டெல்

0
517

ஏர்டெல்லின் பூஜா சிங் என்ற வாடிக்கையாளர் தனக்கு சேவையளிக்க முஸ்லிம் ஊழியர் வேண்டாம், இந்து ஊழியரை நியமனம் செய்யுங்கள் என்று கூறியதற்கு ஏர்டெல் நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. அதற்கு டிவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றது .

டெல்லியைச் சேர்ந்த பூஜா சிங் ஏர்டெல் நிறுவனத்தில் டிடிஎச் (DTH) – இன் வாடிக்கையாளர் , அவர் ஏர்டெல் டிவிட்டரில் ஏர்டெல் டிடிஎச் இணைப்பு குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசியபோது, ஒரு ஊழியர் தவறாக என்னிடம் பேசினார் . அதனால் இனிமேல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவே பயமாக இருக்கிறது என்றும் மேலும் பல்வேறு புகார்களை கூறியும், அந்தச் சேவை மையத்தின் ஊழியரின் பெயரையும் பதிவிட்டார்.

உடனடியாக ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பூஜா சிங்குக்கு பதில் டிவீட் வந்தது. சோயிப் என்ற ஏர்டெல் ஊழியர் உங்களின் புகாரை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் இதைச் சரி செய்வோம். உங்களிடம் பேசியது சோயிப் நன்றி என்று பதிவிட்டார்.

மறுபடியும் பூஜா சிங் டிவிட்டரில் ’’சோயிப், நீங்கள் ஒரு முஸ்லிம். உங்களின் பணி விதிமுறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால், உங்கள் மதத்தின் புனித நூலில் வாடிக்கையாளர் சேவை குறித்து பல்வேறு முறைகள் இருக்கின்றன. எனக்கு ஒரு இந்துமதத்தைச் சேர்ந்த ஊழியர் சேவை அளிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன் என்று பதிவிட்டார்.

இதையடுத்து, ஏர்டெல் நிறுவனம் டிவீட் செய்தது அதில், ”பூஜா, உங்களுக்கு எந்த நேரத்தில், எந்த நாளில், உங்களுடன் பேச வேண்டும் என்று கூறினால், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தருகிறோம். உங்களைத் தொடர்பு கொள்ள செல்போன் எண் இருந்தால், தெரிவிக்கவும். நன்றி ககன்ஜோத்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏர்டெல் நிறுவனம் பூஜாசிங்கின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் ஊழியரை மாற்றி, இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியரை அவருடன் பேச ஏற்பாடு செய்வதாக அறிவித்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஊழியருக்குப் பதிலாக இந்து ஊழியரை நியமிக்க ஒப்புக்கொண்டது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த வாடிக்கையாளரின் சேவையை ஏர்டெல் நிறுவனம் ரத்து செய்து , தங்கள் ஊழியரின் மரியாதையை தக்கவைத்து இருக்க வேண்டும் என்பது போலான கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவாகியது.

ஏர்டெல்லுக்கும், பூஜா சிங்கிற்கும் நடந்த உரையாடல்களை பார்த்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா டிவிட்டரில் ’’ஏர்டெல் நிறுவனத்துக்கு, நீங்கள், பூஜாசிங்குடன் நடத்திய உரையாடலைப் படித்தேன். உங்கள் நிறுவனத்துக்கு இனிமேல் ஒருபைசா கூட கட்டணம் செலுத்த நான் தயாராக இல்லை. நான் வைத்திருக்கும் ஏர்டெல் எண்ணையும், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்ற எம்என்பி செய்யப் போகிறேன், எனது வீட்டில் இருக்கும் ஏர்டெல் டிடிஎச் சேவையையும் அகற்றப் போகிறேன்’’ என்று பதிவிட்டார்.

ஐந்தாறு மணி நேரத்துக்குப் பின், ஏர்டெல் நிறுவனம் தவற்றை உணர்ந்து தனது ஊழியர் ககன்ஜோத் செய்த டிவீட்டையும் நீக்கியது .

’’பூஜா, ஏர்டெல் நிறுவனம் மதம், ஜாதி ஆகியவற்றைப் பார்த்து வேறுபாட்டுடன் நடத்துவதில்லை. உங்களையும் அப்படித்தான் நடத்தினோம். உங்களிடம் பேசிய சோயிப், ககன்ஜோத் இருவரும் எங்களின் ஊழியர்கள்தான். எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பாக அழைக்கும் போது, முதலில் யாருக்கு அழைப்பு கிடைக்கிறதோ அவர்தான் எடுத்து பதில் அளிப்பார். எல்லோரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று டிவீட் செய்தது .

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here