முஸ்லிம்கள் மீது வெறுப்பை பரப்பும் டிவிட்டர் கணக்குகளை பின்தொடரும் பிரதமர் மற்றும் பாஜக அமைச்சர்கள்

0
533

அக்டோபர் 20 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை)  டிவிட்டரில் ‘முஸ்லிம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என வலதுசாரி அமைப்புகள் (இந்துத்துவா அமைப்பினர்)  டிரெண்ட் செய்தனர்.

இந்த ஹேஷ்டேக் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பரப்பியது. முஸ்லிம்களிடமிருந்து  பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள், முஸ்லிம்கள் உணவு டெலிவரி செய்தால் வாங்காதீர்கள் என்பன உள்பட பல வெறுப்பை பரப்பும் வகையிலான செயல்களை செய்யும்படி அந்த டிவிட்டுகள் தெரிவித்தன 

இந்தியா முழுவதும் இருக்கும் மதரஸாக்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியது ஒரு இந்துத்துவா அமைப்பு. 

மற்றுமொருவர் சோமேட்டோவில் முஸ்லிம் ஒருவர் டெலிவரி செய்ததால் நான் ஆர்டரை ரத்து செய்தேன் என்று பதிவிட்டிருக்கிறார். 

இதுமாதிரி வெறுப்பை மதவெறியை பரப்பும் டிவிட்டுகள் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாவது முதல்முறையல்ல . அக்டோபர் 18 ஆம் தேதி முகமது நபி ஓரின சேர்க்கையாளர் என்று டிரெண்ட் செய்யப்பட்டது . #ProphetisGay என்ற ஹேஷ்டேக் அது. அக்டோபர் 19 ஆம்தேதி  #BoycottAllah என்று 20000 டிவிட்டுகள் செய்யப்பட்டது. 

இதுபோன்ற பதிவுகள் தெளிவாக மத அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு எதிரான பாகுபாட்டை ஏற்படுத்தும் செயல்களாகும். மதவெறியை ஊக்குவிக்கும் செயலாகும்.  இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின்படி இரண்டு சமூகங்களுக்கிடைய பகைமை உருவாக்குவது சட்டப்படி தவறாகும்.

இதுபோன்ற ஹேஷ்டேக் போடுகிறவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். இந்த மாதிரியான பகைமையை, வெறுப்பைத் தூண்டும் வகையில் ஹேஷ்டேக் பதிவிடுபவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுவார். 

டிவிட்டரில் இதுமாதிரியான வெறுப்பை , பகைமையை பரப்புபவர்கள் மீது இது வரையில் போலீஸ் துறையும், எந்த ஒரு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. 

டிவிட்டரில் இதுமாதிரி வெறுப்பை உமிழும் தனிநபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது இயல்பானதே ஏனென்றால் இந்தத் தனிநபர்களை பல அரசியல்வாதிகள், அதாவது பிரதமர் மோடி உட்பட பல்வேறு அமைச்சர்கள் பின்தொடர்கிறார்கள். 

கோவிந்த்ஹிந்து என்ற தனிநபர் வெறுப்பை பரப்பும் வகையில் செயல்பட்டுவருகிறார். அவரை பிரதமர் உட்பட 4 பாஜக அமைச்சர்கள் பின்தொடர்கிறார்கள்.  

இதேபோல, எக்ஸ் செக்யூலர் (ExSecular) என்ற கணக்கில், பாஜக ஆர் எஸ் எஸ் எதிர்ப்பாளரான ஸ்வரா பாஸ்கர் கமலேஷ் திவாரிக்கு நீதி கேட்பதாக போட்டோஷாப் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்தக் கணக்கையும் மோடி, பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் பின் தொடர்கிறார்கள்.

பியுஸ் கோயல் ஆபீஸ் என்ற பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கு சோமேட்டோ நிறுவனம் முஸ்லிம் ஒருவரை வைத்து  டெலிவரி செய்ததால் குழப்பத்தை ஏற்படுத்திய @NaMo_Sarkaar என்ற கணக்கையும் பின்தொடர்கிறது. 

இவ்வாறு பிரபல பாஜக அமைச்சர்கள் இது மாதிரி வெறுப்பை உமிழும் தனிநபர்களை பின்தொடர்வதால் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். 

மனதுக்கு இதம் தரும் ஒரே விசயம் என்னவென்றால் வெறுப்பை பரப்பும் ஹேஷ்டேக்குகளைவிட மதத்தைக் கொண்டாடும் ஹேஷ்டேக்குகள் 3 மடங்குகள் அதிகமாக மக்களிடம் சென்று சேருகிறது என்பதே. 

  http://thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here