ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி அக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், இப்போது இருக்கும் நிலையில் முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இரண்டு நபர்கள் நேற்று இரவு பசு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இவர்களை மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்கள் சந்தேகித்து, சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான அக்பர் கானை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. அக்பர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பசுக்குண்டர்களுக்கு எதிராக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கடுமையாக தீர்ப்பளித்திருந்த நிலையிலும் கூட இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆல்வரில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் அவரின் டிவிட்டர் பக்கத்தில் வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் உண்மைக்கு புறம்பாக இருக்கிரது. ராஜஸ்தானில் நடந்திருக்கும் கொலையைப் பார்க்கும்போது ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தி பிரிண்ட் எனும் டிஜிட்டல் மீடியா பக்கத்தில் சஷி தரூர் பசுகுண்டர்களால் நடத்தப்படும்வன்முறை குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதையும் தனது டிவிட்டர்பக்கத்தில் இணைத்துள்ளார். அதில் கடந்த 8 ஆண்டுகளில் பசு தொடர்பான வன்முறைகளால் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 98 சதவீத வழக்குகள் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் பதிவு செய்யப்பட்டவை, பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தவையாகும். இந்தத் தாக்குதலில் 136 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here