முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார் பேசியுள்ளார்.

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை பாகிஸ்தானி என அழைப்பவர்களைத் தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், ”முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்லட்டும். அவர்களுக்கு இங்கு என்ன வேலை?. தேசியக் கொடியையும், வந்தே மாதரத்தையும் அவமதிப்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

முன்னதாக, தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும் என வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்