நீட் விலக்கு பிரச்னையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது எனவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். 

இதையடுத்து திமுக வெளிநடப்பில் ஈடுபட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். ஆனால் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் அவையில் தெரிவிக்கவில்லை. 

இதுகுறித்து தெளிவான பதிலை சட்டத்துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சொல்லவில்லை. கடிதம் வந்தவுடனே அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி சண்முகம்” எனத் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here