முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள் : மோடிக்கு, ராகுல் அட்வைஸ்

Coming down heavily on the Narendra Modi-led NDA government, senior Congress leader Rahul Gandhi on Wednesday criticised Prime Minister Narendra Modi for the present bad state of the economy.

0
469

மத்திய நிதி  அமைச்சர் சீதாராமனை நீக்கிவிட்டு அவர் மீது முழு பழியையும் போட்டுவிட்டால் பொருளாதார பிரச்சினை தீர்ந்துவிடும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், நாட்டின் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதாகவும்,  மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பட்ஜெட் இருப்பதாகவும் கூறியிருந்தார். 

ஆனால், இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறிவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவ்வகையில் பட்ஜெட் குறித்து இன்று(புதன்கிழமை) தனது டிவிட்டரில் பதிவில் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், “அன்புள்ள பிரதமரே, பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இந்த விஷயத்தில், உங்கள் மீது விழுந்திருக்கும் பழியை எப்படித் தவிர்ப்பது என மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். நிர்மலா ஜி சமர்ப்பித்த யோசனை இல்லாத, ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்டை பயன்படுத்துங்கள். பின்னர் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள். பிரச்சினை தீர்ந்தது” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here