முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை.

ALSO READ:👇
.

80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ALSO READ:👇
.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் துரைமுருகனுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், விளம்பரத்திற்காக ஆய்வு செய்தவர்கள் தான் தேதி எல்லாம் குறித்து வைப்பார்கள். மக்களுக்கு நன்மை செய்ய உள்ள உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்வோர்கள் சென்ற தேதியை குறித்து வைக்க மாட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here