முலாயம் சிங் யாதவ்,அகிலேஷ் யாதவ் சொத்துக்குவிப்பு வழக்கு; நற்சான்றுக் கொடுத்தது சிபிஐ

0
197

வாக்குஎண்ணிக்கைக்குஇன்னும் 2 நாள்: சொத்துக்குவிப்புவழக்கில்முலாயம்சிங், அகிலேஷ்க்குசிபிஐநற்சான்று

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் , அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று நற்சான்று அளித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வராக முலாயம் சிங் கடந்த 1999 முதல் 2005-ஆம் ஆண்டுவரை இருந்தபோது, ரூ.100 கோடிக்கு முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு  சிபிஐக்கு  கடந்த 2007-ஆம் ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியது. ஏறக்குறைய 12 ஆண்டுகளாக விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில் 2019 பிப்ரவரி மாதம் முலாயம் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை 2007-ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது, விசாரணையின் நிலை என்ன, விசாரணையை விரைந்து முடிக்குமாறு  கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின்  விசாரணை நிலவரம் குறித்து ஏப்ரல் மாதத்துக்குள் அறிக்கைதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ கடந்த 9-ஆம் தேதி முலாயம் சிங், அகிலேஷ் யாத் மீதான வழக்கின் நிலவரம் குறித்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை புதிதாக பிரமாணப்பத்திரத்தை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள், சாட்சிகள், சந்தேகத்துக்குரியவர்கள் ஆகியோரிடம் கவனமாக விசாரணை நடத்தினோம்.

இந்த விசாரணையில் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக புகார்களுக்கு ஆதாரம்  இல்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் குடும்பத்தினருக்கு எதிரான முதல் கட்ட விசாரணையை முடித்துவிட்டோம்.

நாங்கள் நடத்திய முதல்கட்ட விசாரணை மிகவும் நியாயமாக, பாரபட்சமின்றி, கடமைதவறாமல் உச்ச நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மக்களவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாக 2 நாளே இருக்கும் நிலையில்  சிபிஐ இந்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடி ஆலோசித்து வரும் நிலையில்,  சிபிஐ திடீரென்று மனுத்தாக்கல் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here