முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் டெலிவிரி ரிக்சாக்கள் : அமேசான்

0
240

அமேசான் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் இந்தியாவிற்ற்கு வந்த அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் இந்தியாவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அரசிடம் இருந்து வெளிப்படையான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், முழுவதும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை வீடியோ மூலம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெஃப் பெசோஸ் அறிமுகம் செய்துள்ளார்.

மேலும்,காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கார்பன் வெறியேற்றாத வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here