முற்றிலும் மாறுபட்ட நோக்கியா 7.3 ரென்டர்கள் வெளிவந்தன

Nokia 7.3 leaked in renders posted online. Nokia 7.3 is expected to be launched in next few months. Nokia 7.3 could come with a 6.5 inch display with punch-hole cutout.

0
158

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

இவை சிஏடி வரைபடங்களை தழுவிஉருவாக்கப்பட்டு இருக்கின்றன. அளவில் இது 165.8×76.3×8.2 எம்எம் அளவில் இருக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக் வழங்கப்படுகிறது.

மேலும் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல்ஸ்கிரீன், நான்கு கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+HDR பியூர் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு, மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் எனகூறப்படுகிறது.

முன்புறம் 24 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் ஐஎஃப்ஏ 2020 இல் அறிமுகப்படுத்தப்படவிருந்தது, ஆனால் பின்னர் இது 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here