முற்றிலும் தவறு: சுஷ்மா சுவராஜ் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதற்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

0
294

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சுஷ்மா சுவராஜைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களை கண்டித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதற்கு திங்கட்கிழமை தனது கண்டனங்களை தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “நான் இதனை முற்றிலும்
தவறானதாக கருதுகிறேன்,” என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதனை கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“சமூக ஊடகங்களில் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எதிராக தவறான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளதை வலிமையாக கண்டிக்கிறேன். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி. நாம் ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும். பிறரை எந்த வகையிலும் சொற்களால் காயப்படுத்தக் கூடாது,” என்று மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

பாஸ்போர்ட் அலுவலக ஊழியரால் வேறு வேறு மதத்தை பின்பற்றும் தம்பதியினர் துன்புறத்தப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுஷ்மா சுவராஜ் அந்த ஊழியரை கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டார் சுஷ்மா சுவராஜ்.

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர், தம்மை துன்புறுத்தியவர்களை அடையாளப்படுத்தும் வகையில் அவர்களது பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டார். தான் வெளிநாட்டில் இருந்தபோது நடந்தவற்றை அறியாத அவர், “2018 ஜூன்
17 முதல் 23 வரை நான் இந்தியாவில் இல்லை. நான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் சில பதிவுகள் என்னை பெருமைப்படுத்தியுள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். எனவே அவற்றை நான் ’லைக்’ செய்துள்ளேன்,” என்று டிவிட்டரில் பதிவிட்டார்.

இதுபோன்ற விமர்சனங்கள் பயன்பாட்டாளர்கள் அங்கீகரிக்கின்றனரா என்பதை அறிந்துகொள்ள சென்ற சனிக்கிழமை இரவு டிவிட்டரில் கருத்து கணிப்பை துவங்கினார் சுஷ்மா. “நண்பர்களே: நான் சில பதிவுகளை ’லைக்’ செய்துள்ளேன். கடந்த சில நாட்களாக இது நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா? தயவுசெய்து பகிருங்கள்,” என்றார் சுஷ்மா. ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த கருத்து கணிப்பில் பங்கேற்று 57 சதவீதம் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here