*ஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப் போகும் முன் சாப்பிட வயிற்றிலுள்ள எல்லாவிதமான பூச்சிகளையும் வெளியேற்றும்.

*ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இக்கீரையின் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது இரத்தத்தோடு சேரும் கொழுப்பையும் குறைக்கும்.
murungai copy t

*இலையை மட்டும் சுத்தமாக அரைத்துப் பிழிந்து இச்சாற்றை கண்களில் விட்டுக்கொண்டால் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண்வலி குணமாகும்.

குழந்தை பிறந்து பால்சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைப் பிஞ்சை, மிளகுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும்.

ph 2
*முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான கண்வலி, கண்எரிச்சல், கண்களிலிருந்து நீர்வடிதல் போன்றவை குணமாகும். பார்வை மங்கல் மற்றும் மாலைக்கண் நோய் குறையிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

*உதிரப்போக்கைக் கட்டுப்படுத்த முருங்கைப்பிஞ்சை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here