முருகதாஸ், விஜய் இணையும் படம்… புதிய தகவல்கள்

0
279

முருகதாஸ் – விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் திரைவாழ்க்கையில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி. அதன் பிறகு கத்தி படத்தில் இருவரும் இணைந்தனர். துப்பாக்கி அளவுக்கு இல்லையெனினும், விவசாயப் பிரச்சனையை பேசியது என்ற சமூக அக்கறை சுகர் கோட்டிங்கால் படம் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

இவர்கள் இணையும் இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அங்கமாலி டயரீஸ், solo படங்களின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சாம்ஸ் சி.எஸ். இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்ஸ் சி.எஸ். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்தவர். இப்போது வரலட்சுமியின் சக்தி, கௌதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது ஸ்கிரிப்ட் பணிகளில் பிஸியாக இருக்கும் முருகதாஸ், ஜனவரில் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : The Golden Touch of Jay Amit Shah (Courtesy: The Wire)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்