ரஜினி நடித்த படங்களில் மூன்று முகம் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் வேடம் முக்கியமானது. தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ போலீஸ் வேடங்களை எடுத்தால் அலெக்ஸ் பாண்டியனுக்கும் அதில் இடம் உண்டு. அதேபோலொரு போலீஸ் அதிகாரியாக ரஜினி முருகதாஸ் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இது அரசியல் படமில்லை என்று முருகதாஸ் கூறியுள்ளார். எனினும் படம் வெளியாகும்வரை அவர் கூறுவதையும் நம்புவதற்கில்லை. முருகதாஸின் முந்தைய வரலாறு அப்படி.

இந்நிலையில், ரஜினி இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று அலெக்ஸ் பாண்டியன் போன்ற டெரரான போலீஸ் அதிகாரி வேடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் இடம்பெற்ற மூன்று முகம் படத்தை பட்டி டிங்கரிங் செய்து மெர்சல் என அட்லி ஊத்தப்பம் ஊற்றியதால் முருகதாஸ் படம் மூன்று முகம் தழுவலாக இருக்க வாய்ப்பில்லை.

அனிருத் இசையில், நயன்தாரா நாயகியாக இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்கின்றன உள்வட்ட தகவல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here