ரஜினி படம் என்றால் கதை அளவுக்கு கட்டுக்கதைகளும் இருக்கும். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் படம் குறித்தும் தினம் ஒரு கதை எழுதப்படுகிறது.

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகதாஸ் இயக்குகிறார், ரஜினி, நயன்தாரா நடிக்கிறார்கள், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், லைகா தயாhpக்கிறது என்பதுவரை உறுதியாகியிருக்கிறது. நயன்தாராவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்படாத தகவல். அதேபோல் அனிருத் இசை என்பதும்.

இது அரசியல் படம் கிடையாது என்று முருகதாஸ் கூறியுள்ளார். அவர் பேச்சை நம்புவதற்கில்லை. திசைதிருப்ப அவர் எது வேண்டுமானாலும் சொல்வார் என்பது கடந்தகால வரலாறு. அதேநேரம், இதுவொரு போலீஸ் கதை என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்த வயதில் அவரை சாதா போலீஸாக காட்ட முடியாது என்பதால் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாக முருகதாஸ் ரஜினியின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது இன்னொரு உபரி தகவல்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here