புத்தாண்டை முன்னிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் தனது மனப்பதிவை வெளிப்படுத்தியுள்ளார். வீடியோவில் அவர் பேசியிருப்பது…

“கடந்த 2018-ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நல்ல நல்ல முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது.

கனா படத்தின் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த வரவேற்பும் பாராட்டும் ஆசீர்வாதமும் மறக்கவே முடியாதது. மகள் ஆராதனா பாடிய முதல் பாடல் இது. நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கனா படத்தைக் கொண்டாடி விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த உற்சாகத்துடன் இன்னும் பல நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும் என்கிற முனைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதரவளித்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், பொதுமக்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த வருடமும் நிறைய படங்களில் நடிக்கிறேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here