மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதுக்கு 5 ஆண்டு சிறை

A Pakistani anti-terror court sentences UN listed Hafiz Saeed, chief of Jamat-ud-Dawa to five years.

0
106

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் நிதி மன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. 

கடந்த 2017ஆம் ஆண்டு ஹபீஸ் சையத் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேர் பாகிஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஹபீஸ் சையத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தன.

பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here