மும்பை கடற்பகுதியில் ஓஎன்ஜிசி பணியாளர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மும்பையின் ஜூஹூ விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை (இன்று) காலை 10.20 மணியளவில், ஓஎன்ஜிசி பணியாளர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு பைலட்டுகளுடன் பவன் ஹன்ஸ் டாபின் என்.3 ரக ஹெலிகாப்டர், புறப்பட்டுச் சென்றது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு உள்ள பகுதியில் காலை 10.58 மணிக்கு சென்று சேர வேண்டியநிலையில், 10.30 மணியளவில் ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டானது. இதனையடுத்து, கடலோர காவற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல்போன ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது.

n3-1

இந்நிலையில், ஹெலிகாப்டரின் பாகங்கள் கடற்பகுதியில் சிதறி கிடப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புக் குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்றவர்களைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்