புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பையின் ப்ளே ஆஃப் கனவைத் தகர்த்தது டெல்லி டேர்வெலிஸ்ஸ்.
mumbai-indians_625x300_1526807124223
பந்த் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து க்ருணால் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். 43 ரன்களுடன் விஜய் சங்கரும், 15 ரன்களுடன் அபிஷேக் சர்மாவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, தில்லி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 174 ரன்களை குவித்தது.

மும்பை தரப்பில் க்ருணால் பாண்டியா, பும்ரா, மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
LAMICHHANEjpg
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் லாமிச்சானே, அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துவீச்சு மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவைக் குலைத்தது.
delhi-daredevils-bcci_625x300_1526721725322
ஆட்ட நாயகன் விருது அமித் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here