(மே-10)ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (மே-10)ஞாயிற்றுக்கிழமை இரவு இரவு 8.45 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதய சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவரை ஓய்வில் இருக்கும்படி வலியுறுத்தி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.

அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையும் நெகடிவாக வந்துள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்தது.  ஏற்கனவே இவருக்கு கடந்த 1990, 2009ம் ஆண்டுகளில் இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், மன்மோகன் விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், 2 நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் (மே-12) இன்று மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here