முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என சோதனை முடிவில் தெரிய வந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (மே-10) ஞாயிற்றுக்கிழமை இரவு  திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, எய்ம்ஸ் மருத்துவர்கள் அவரை கார்டியோ தொராசிக் வார்டில் அனுமதித்தனர். மருத்துவமனையின் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் நிதீஷ் நாயக்கின் மேற்பார்வையில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

பிரபல பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தார். இதற்கு முன்னர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் என் பல்வேறு பதவிகளை வகித்தவர்.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உட்பட மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தனர். அவர் மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என சோதனை முடிவில் தெரிய வந்தது. என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here