முன்னாள் பாஜக அமைச்சர் சின்மயானந்த் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்து படமாக்கி மிரட்டினார்- சட்டக்கல்லூரி மாணவி

0
229

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இணை அமைச்சராக இருந்துள்ளார்.

சின்மயான்ந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாகவும், தன்னிடம் தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாகவும்  வெளியிட்ட வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.

சாமியார் சமூகத்தில் பெரிய தலைவர், பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்” என அந்த வீடியோவில் கூறியிருந்தார் அவர்.

இதனையடுத்து வீடியோ வெளியான அடுத்தநாளே மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“மோடிஜி, யோகிஜி எனக்கு உதவுங்கள். அவர் என்னுடைய குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவர் ஒரு சன்னியாசி, அவரிடம் போலீஸ் பலம் உள்ளதாகவும் அனைவரும் தன் பக்கம் உள்ளதாகவும் தன்னை யாரும் அசைத்துவிட முடியாது எனவும் சொல்கிறார். உங்கள் அனைவரிடமும் நான் நீதி கேட்கிறேன்” என்கிறார் வீடியோவில்.

என்னுடைய மகள் தனிப்பட்ட விசயங்களை எப்போதும் சொன்னதில்லை. ரக்சா பந்தனுக்கு வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கவலையாக இருந்தார். நான்கு நாட்களாக அவரைக் காணவில்லை. அவருடைய கல்லூரி இயக்குனர் சின்மயான்ந்துக்கு எதிராக புகார் அளித்தேன், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை.

“அவளுடைய போன் ஏன் அடிக்கடி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படுகிறது என கேட்டபோது, என்னுடைய போன் நீண்ட காலம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் எனக்கு ஏதோ ஆபத்து என புரிந்துகொள்ளுங்கள் என சொன்னாள். என்னுடைய போன் என் கையில் இல்லாதபோதுதான் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் எனவும் அவள் சொன்னாள்…அவளுடைய கல்லூரி நிர்வாகம் அவளை நைனிதாலுக்கு அனுப்பியதாகவும் அவள் சொன்னாள்” என்று கூறியிருந்தார் பெண்ணின் தாய்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்க, சின்மயானந்த் தரப்பு புகாரிலிருந்து தப்பிக்க, சின்மயானந்திடம் ரூ. 5 கோடி கேட்டு யாரோ போனில் பேசியதாக போலீசில் புகார் அளித்திருந்தது . 

வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர் சின்மயானந்த், ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் நிழலில் சாமியாராக ஆசிரமம், கல்வி நிலையங்களை உருவாக்கி ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறார். 2011-ஆம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண், இவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரை சொல்லியிருந்தார்.

அந்தப் புகாரில் தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார். உயர்நீதிமன்றம் சென்ற சின்மயானந்த் கைதாவதிலிருந்து தப்பித்துக்கொண்டார். நிலுவையிலிருந்த அந்த வழக்கை சாமியார் ஆதித்யநாத் அரசு பதவிக்கு வந்தவுடன் திரும்பப் பெற்றுக்கொண்டது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.

அந்த பெண், ‘சின்மயானந்த் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடமாக தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்’ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள லோதி சாலை காவல் நிலையத்தில் அந்த பெண் சமர்பித்த 12 பக்க புகாரில், தனக்கு உத்தரப்பிரதேச காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரது குடும்பத்திற்கு ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனிடையே, ஊடகத்திற்கு மத்தியில் தனது அடையாளத்தை பாதுகாக்க முகம் முழுவதையும் ஒரு கருப்பு துணியால் மறைத்து பேசினார். 

இதனிடையே நேற்றைய தினம் திறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலிஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதையடுத்து, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரம் தேடுவதற்காக, ஷாஜகான்பூரில் அந்தப் பெண் தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் சிறப்பு புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. 


இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சின்மயானந்த் மீது புகார் அளித்த பெண் தங்கியிருக்கும் அறையை சோதனை செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மதியம் சிறப்பு புலனாய்வு குழுவினர் வந்தனர். அந்த பெண் தங்கியிருந்த அறையில் இருவர் தங்கலாம் என்றாலும், அவர் அங்கு தனியேதான் தங்கியிருந்தார். சுமார் 6 மணி நேரம் வரை சோதனை நடத்தினர். 
அதன் பின்னர் அந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சோதனையின்போது புகார் அளித்த பெண்ணும், அவரது பெற்றோரும் புலனாய்வுக் குழுவினருடன் இருந்தனர் என்று கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here