முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தீர்மானம்

The crucial meeting of the Association of Malayalam Movie Artists (A.M.M.A) held on Sunday dispersed without discussing crucial issues, including a pay cut for actors, in the wake of COVID pandemic, after police intervened.

0
144

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது. கேரளாவிலும் இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், அங்கு படப்பிடிப்புக்கு அரசு அனுமதித்த நிலையிலும் முழு வீச்சில் படப்பிடிப்புகள் நடக்கவில்லை.

தயாராகி முடிந்த பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இதனை அடுத்து நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை குறைக்க வேண்டும் என்ற மலையாள தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.  தங்களை கேட்காமல் சம்பளம் குறைப்பு குறிது முடிவெடுப்பதா என்று மலையாள நடிகர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  கொச்சியில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைப்பு தொடர்பாக விவாதம் நடந்தது. இதில், கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் வரை முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here