முன்னணி டென்னிஸ் வீரருக்கு கொரோனா உறுதி

Serbian tennis ace Novak Djokovic has tested positive for the coronavirus.

0
172

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையிலும் சில நாடுகளில் கொரோனாவுக்கு மத்தியிலும் விளையாட்டுப் போட்டிகள்பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முன்னணி வீரர்கள் பங்கேற்கும் அட்ரியாடூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா, குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போட்டிகளை ரசிகர்கள் காணவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின் ‘நம்பர்-1’டென்னிஸ் வீரர்செர்பியாவின் ஜோகோவிச் சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது.

இதில் சமூக இடைவெளியேரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில், உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று(திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

மேலும், செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததால், இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது.

இந்நிலையில், ஜோகோவிச்சும் பெல்கிரேடு சென்று சோதனை செய்து கொண்டார்.இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று இருப்பது தெரியவர, இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Image

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here