ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு பாஜக என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் ஏழைகளை காலடியில் விழ செய்ததாகவும் குற்றம் சாட்டினார். உத்தர பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பண்டா, ஃபதேபூர், ஹர்டோய், லக்கிம்பூர் கேரி, லக்னோ, ரேபரேலி, சீதாபூர், பிலிபித் மற்றும் உன்னாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 ெதாகுதிகளில் நான்காவது கட்டமாக இன்று (பிப். 23) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு பாஜக என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உ.பி.யின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தத் தேர்தல் அவசியம். நாட்டின் மொத்தப் பரப்பளவில் உ.பி.,யின் பரப்பளவு 7% ஆக இருக்கலாம். ஆனால், அதன் மக்கள் தொகையைப் பார்த்தால் அது இந்தியாவின் மக்கள்தொகையில் 16%-க்கும் அதிகமாக உள்ளது.

இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள். வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக புறக்கணித்தார்கள். முஸ்லிம் வாக்காளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வலுவான ஆதரவை பா.ஜ.க ஏற்படுத்துவதாகவும், முத்தலாக் எனும் கொடிய சுழலில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரிகளை விடுவித்தது தமது அரசுதான். உத்தரப்பிரதேசத்தில் வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் ஏழைகளை காலடியில் விழ செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here