தங்கம் விலை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. சில சமயங்களில் அதிரடியாக விலை உயர்ந்தும் வந்தது.

இதற்கு முன்னர் தங்கம் விலை சவரன் ₹30,000 வரை வந்துள்ளது தான் புதிய சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில், தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சவரன் 30,520க்கு விற்பனையானது. நேற்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சவரன் 632 அதிகரித்தது. வரும் நாட்களில் மேலும் ஏற்றம் இருக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று சவரன் 29,880க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (2ஆம் தேதி) சவரன் 29,888க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.79 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 3,815க்கும், சவரனுக்கு 632 அதிகரித்து ஒரு சவரன் 30,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் இதுதான் முதல்முறை.

பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்ற துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், உலகச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவும் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்துள்ளது.

இன்னும் 3 மாதத்தில் சவரன் ரூ.34,000 கடக்கும். அதாவது, ஒரு கிராம் ரூ.4200 கடந்து செல்ல வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்திற்குள் சவரன் ரூ.34,000 கடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here